வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு" alt="" aria-hidden="true" />
கொரோனா நோய் பருவுவதை தடுக்கும் வகையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது . இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளதால் ஆம்பூர், வாணியம்பாடி திருப்பத்தூர் ஆகிய நகராட்சி பகுதிகள் முழு தடை செய்யப்பட பகுதியாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு அமுலில் உள்ளது.
வாணியம்பாடி நகராட்சி பகுதி முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்த பின்னர் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் வேளாண்துறை, நகராட்சி, வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பொருட்கள், காய்கறிகள், பால் ஆகியற்றவை தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான பகுதிகளுக்கு அத்தியவாசி பொருட்கள் சேரவில்லை என்று பொதுமக்களின் புகாராகும். மேலும் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வங்கிகள் இயங்கததாலும், வங்கி ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததாலும் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் இருந்தும் எடுக்க முடியவில்லை.
3 மற்றும் 7 மாத கர்பிணி பெண்கள் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றால் அங்கே மருத்துவர்கள் பிரசுவும் மட்டும் பார்க்க வாருங்கள். பரிசோதனை செய்ய மாட்டோம் என்கின்றனர். இதனால் கர்பிணி பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வீடு தேடி வரும் காய்கறிகள் ஒரு பாக்கெட் ரூ.100 என்று விற்கப்படுவதால் ஏழை மக்கள் அதனை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் விலைக்கு ஏற்ப அதில் காய்கறிகள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது.
ஆகையால் முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவிப்புக்கு முன்னர் எப்படி காலை 6மணி முதல் 10 மணி வரையில் அனைத்து அத்தியவாசி பொருட்களுக்காக கடைகள் இயங்கி வந்ததோ அதேபோல் நடைமுறை படுத்தினால் மக்கள் அரசு வித்தித்துள்ள தடை உத்தரவு கடைபிடிக்க எதுவாக இருக்கும்.
மேலும் வாணியம்பாடியில் மொத்தம் 120க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் கையுறை தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தோல் பொருகள் மற்றும் இயந்திரங்கள் உள்ளன. தடை உத்தரவு அமுலில் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு தொழிற்சாலைக்கு இருவர் என்று வாகன அனுமதி சீட்டு வழங்க வேண்டும் உட்பட கோரிக்கையை மனுவில் குறிப்பட்டுள்ளனர்.
மினி லார்களில் காய்கறிகளை விற்ற அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டி சார்பில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் சுசில் தாமஸ் வாகன உரிமையாளர்களை அறிவுரை வழங்கி வாகனங்களை விடிவித்தார்.