கம்பைநல்லூர் அடுத்த வி.பள்ளிப்பட்டு கிராமத்தில் 100 அடி கிணற்றில் தவறி விழுந்த மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் பாராட்டு
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மாவட்டம் கம்பைநல்லூர் அருகிலுள்ள வி. பள்ளிப்பட்டி கிராமத்தில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த கரவை மாடு சுமார் 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்து உள்ளது.உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்படி 100 அடி ஆழத்தில் விழுந்த கறவை மாட்டை சுமார் ஒரு மணி நேரம் போராடி எவ்வித காயமும் இன்றி அரூர் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு கறவைமாட்டை உயிருடன் மீட்டனர். கறவை மாட்டை உயிருடன் மீட்டதால் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்